Monday, April 6, 2009

கடல் காதலன்

கடலின் உள்ளே கரை இல்லை
உன் காதலிலும் கரை இல்லை

"சகா"

இருட்டில் கிடைத்த நிழல் நீ
உன் நிழலை இரவல் கேட்ட இருள் நான்
இருட்டில் வரைய தொடங்கிய நிழல் ஓவியத்தை
விடிவதற்குள் வடித்து முடிக்க வேண்டும்

மீன்

வண்ணம் இல்லா நீரில்
வண்ணமயமான ஓவியம் நீ !!

மீன்

பார்ப்பதற்கு அழகாய்
தொடுவதற்கு சுகமாய்
ருசிப்பதற்கு சுவையாய்
இருப்பதற்கு
நீ என்ன பெண்ணா ?

பெண்

இரவில் கடலுடன் உறவாடி
பகலின் சூரியனை
பெற்றெடுக்கும் கடலும்
பெண் தான்

நெருப்பின் கற்பு

சத்தம் இல்லாமல் கற்பு இழப்பவன் நீ
அனைந்தாலும் அனைத்தாலும் 
அனலாய் சுகம் பிறக்கும்

எறிவதை நாடறியும்
அனைப்பதை நீ அறிவாய்
பூ கொய்வதை நான் மட்டுமே அறிவேன்

நெருக்கத்தினால் உறுபெருவாய்
உயிர் கொடுப்பாய்
சாம்பல் ஆனாலும்
சங்கதிகள் பெயர் சொல்லும்
நீ - ஆண்